உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குடியிருப்புக்கு மத்தியில் கிணறு மூடுவதற்கு கோரிக்கை

குடியிருப்புக்கு மத்தியில் கிணறு மூடுவதற்கு கோரிக்கை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியம், பொற்பந்தல் ஊராட்சிக்கு உட்பட்டது சத்யாநகர் கிராமம். இப்பகுதியில், தெருப்பாதை ஓரத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு அமைத்த புது கிணறு உள்ளது.காலப்போக்கில் புதிய குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுத்தியதை அடுத்து, இந்த கிணறு கைவிடப்பட்டு ஒரு பகுதி இடிந்து விழுந்து தற்போது ஆபத்தான நிலையில் உள்ளது.குடியிருப்புகளுக்கு மத்தியில் இந்த கிணறு உள்ளதால், எப்போதும் இங்கு குழந்தைகள் விளையாடும் சூழல் உள்ளது. மேலும், இந்த கிணற்றில் அவ்வப்போது கால்நடைகள் விழுந்து பாதிக்கப்படுகிறது.எனவே, பயன்பாடு இல்லாமல் கைவிடப்பட்ட நிலையிலான இந்த பொது கிணறை துார்த்து விபத்து அபாயம் தவிர்க்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ