உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பொற்பந்தலில் பாலாற்று குடிநீர் வினியோகிக்க கோரிக்கை

பொற்பந்தலில் பாலாற்று குடிநீர் வினியோகிக்க கோரிக்கை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டபொற்பந்தல்கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியினரின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் ஆழ்த்துளை கிணறு அமைத்து, அதன் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.ஆழ்துளை கிணறு மூலம் வினியோகிக்கின்ற குடிநீர் சுவையானதாக இல்லை எனவும், கோடைக் காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் அப்பகுதியினர் கூறி வருகின்றனர். இதனால், பொற்பந்தல் கிராமத்திற்கு பாலாற்று குடிநீர் வழங்க அப்பகுதியினர் வலியுறுத்தி வருகின்றனர்.இதுகுறித்து பொற்பந்தல் கிராமத்தினர் கூறுகை யில், ''திருமுக்கூடல் பாலாற்றில் இருந்து, சிறுதாமூர் ஊராட்சிக்கு பட்டா கிராம சாலை வரை குடிநீர் வருகிறது. அங்கிருந்து பொற்பந்தல் ஒன்றரை கி.மீ., துாரம்தான் உள்ளது. ''எனவே, இப்பகுதியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தி, பாலாற்றுகுடிநீர் வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை