மேலும் செய்திகள்
அழிசூர் குடிநீர் கிணற்றில் பாம்புகள் நடமாட்டம்
9 hour(s) ago
4 மாதங்களிலேயே சாலையோரம் சேதம்
9 hour(s) ago
காஞ்சிபுரத்தில் நாளை மின் குறைதீர் கூட்டம்
9 hour(s) ago
தொங்கும் மின் ஒயரால் விவசாயிகள் அச்சம்
9 hour(s) ago
வாலாஜாபாத்:வாலாஜாபாத் சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடங்கள் உள்ளன.தனியார் கல் குவாரிகளும் இயங்குகின்றன. இது தவிர, பல கிராமங்களில், குடிசை வீடுகளும் உள்ளன. தொழிற்சாலைகளில் அவ்வப்போது மின் கசிவு மற்றும் தீ விபத்து மற்றும் பிற அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன.சமீபத்தில் வாலாஜாபாத் அடுத்த, நத்தாநல்லூர் கிராமத்தில் இயங்கும் தனியார் தொழிற்சாலையிலும், அதற்கு முன்பு தேவரியம்பாக்கம், கேஸ் சிலிண்டர் கிடங்குகளிலும் தீ விபத்துக்கள் ஏற்பட்டன குறிப்பிடத்தக்கது.இது போன்ற நேரங்களில், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து, தீயணைப்பு வாகனங்கள் வர வைக்கப்படுகின்றன. தீயணைப்பு வாகனம் மற்றும் வீரர்கள் வருவதற்குள், தீ வேகமாக பரவி, முழுவதும் நாசமாகிறது.எனவே, வாலாஜாபாத் பகுதியில் புதிய தீயணைப்பு நிலையம் துவக்க வேண்டும் என, சுற்றுவட்டார பகுதியினர் பலரும் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago
9 hour(s) ago