| ADDED : ஜூலை 22, 2024 11:17 PM
உத்திரமேரூர், : உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகர்கிராமத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ், 350 ஏக்கர் பரப்பிலான ஏரி உள்ளது. இந்த ஏரிக்கரை ஒட்டியுள்ள பாதையை பயன்படுத்தி, அப்பகுதியினர், மானாம்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்த ஏரிக்கரை பகுதியில் இருபுறமும் பல வகையான செடி கொடிகள் மற்றும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து படர்ந்து காணப்படுகின்றன.இதனால், ஏரிக்கரை மீது விவசாயம் சார்ந்த பணிகளுக்காக மாட்டுவண்டி, டிராக்டர், டில்லர் இயந்திரம் உள்ளிட்ட வாகனங்கள் இயக்க முடியாத நிலை உள்ளது.எனவே, ஏரிக்கரை மீது படர்ந்துள்ள செடி, கொடிகள் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும்.ஏரிக்கரையை பலப்படுத்தி வாகனங்கள் சென்றுவர ஏதுவாக சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.