உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மணித்தோட்டம் மயானத்திற்கு பாதை வசதி ஏற்படுத்த கோரிக்கை

மணித்தோட்டம் மயானத்திற்கு பாதை வசதி ஏற்படுத்த கோரிக்கை

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சி, 18வது வார்டில், மணித்தோட்டம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கான மயானம் அப்பகுதி விவசாய நிலங்களுக்கு மத்தியில் அமைந்துள்ளது.இப்பகுதி மயானத்திற்கு இதுவரை பாதை வசதி ஏற்படுத்தாததால், உயிர் நீத்தோர் சடலங்களை விவசாய நிலங்கள் வழியாக கொண்டு செல்லும் நிலை இருந்து வருகிறது.இதனால், அச்சமயங்களில் விவசாய நிலங்களில் சாகுபடி செய்திருந்தால், மயானத்திற்கு சடலங்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, மணித் தோட்டம் மயானத்திற்கு பாதை வசதி ஏற்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ