மேலும் செய்திகள்
பெண் போலீசின் கையை கிழித்த போதை வாலிபர்கள் கைது
27-Aug-2024
சென்னை: புதுப்பேட்டை ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிந்து வருபவர் கவுசல்யா, 26. இவர், நேற்று முன்தினம் இரவு ராயப்பேட்டை வி.எம்., தெருவில் உள்ள முண்டக கன்னியம்மன் கோவில் திருவிழாவில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது வாலிபர்கள் சிலர், மக்களுக்கு இடையூறாக மதுபோதையில் குத்தாட்டம் போட்டுள்ளனர். அவர்களை கவுசல்யா கலைந்து செல்லும்படி கூறியுள்ளார்.இதில் ஆத்திரமடைந்த நபர்களில் ஒருவர், தான் கையில் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் கவுசல்யாவின் கையில் கிழித்துள்ளார்.இதில் காயமடைந்த பெண் காவலருக்கு, ராயப்பேட்டை மருத்துவமனையில் கையில், ஆறு தையல்கள் போடப்பட்டன. சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த ராயப்பேட்டை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இதில், சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்த அஜய் ராகுல், 23, ராயப்பேட்டையச் சேர்ந்த சசிகுமார், 20, மணிகண்டன், 19, சரவணன், 18, ஸ்ரீதர், 22, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கிஷோர், 19, ஆகிய ஆறு பேரை நேற்று கைது செய்தனர்.
27-Aug-2024