உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பாலாற்றில் வாலிபர் உடல் புதைந்த நிலையில் மீட்பு

பாலாற்றில் வாலிபர் உடல் புதைந்த நிலையில் மீட்பு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், அய்யம்பேட்டை நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ், 21. கடந்த 6ம் தேதி, இரவு 7:00 மணிக்கு, அய்யம்பேட்டை கடைத்தெருவுக்கு சென்று வருவதாக கூறி, வீட்டில் இருந்து புறப்பட்ட தனுஷ் மீண்டும் திரும்பவில்லை. இதையடுத்து, அவரது பெற்றோர், வாலாஜாபாத் போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் தனுஷ் குறித்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை, ஏகனாம்பேட்டை அடுத்த, கோயம்பாக்கம் பாலாற்றங்கரையை ஒட்டிய ஆற்று மண்ணில் ஆண் ஒருவரது கால் மட்டும் வெளியே தெரியும்படி புதைந்த நிலையில் இருப்பதை அப்பகுதியினர் கண்டனர்.வாலாஜாபாத் போலீசார் அப்பகுதிக்கு வந்து, பாலாற்றில் பாதி உடல் புதைந்த நிலையில் இருந்த ஆண் சடலத்தை மீட்டெடுத்து விசாரணை செய்தனர். விசாரணையில், அவர் கடந்த 6ம் தேதி காணாமல் போன அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்பது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை