உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / எச்சரிக்கை பலகையின்றி சாலை வளைவுகள்

எச்சரிக்கை பலகையின்றி சாலை வளைவுகள்

பிச்சிவாக்கம் : மதுரமங்கலம் அடுத்த, ஓ.எம்.மங்கலம் கூட்டு சாலையில் இருந்து, தக்கோலம் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த சாலையில், பிச்சிவாக்கம், தக்கோலம் கொசஸ்தலை ஆறு இரு இடங்களில், அபாயகரமான சாலை வளைவுகள் உள்ளன.இவை இரண்டும் குறுகிய வளைவுகளாக இருந்தும், நெடுஞ்சாலைத் துறையினர் சாலையோர வளைவில் எச்சரிக்கை பலகை அமைக்கவில்லை. அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் அசுர வேகத்தில் செல்வதால், வளைவுகளில் விபத்து நேரிடுகிறது.இதை தவிர்க்க, பிரதான சாலை வளைவுகளில், எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்