உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையோரம் குப்பை கழிவு வாலாஜாபாதில் சீர்கேடு

சாலையோரம் குப்பை கழிவு வாலாஜாபாதில் சீர்கேடு

வாலாஜாபாத்:வாலாஜாபாத் பேரூராட்சி, 12வது வார்டில் பஜார் சந்து அருகே பி.கே., செட்டித் தெரு உள்ளது. இத்தெருவில் உள்ள சக்தி மிகுந்த விநாயகர் கோவில் பின்புறம் வழியாக, கழிவுநீர் கால்வாய் அமைந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த குடியிருப்பு வாசிகள் மற்றும் கடை வைத்திருப்போர் சிலர், கழிவுநீர் கால்வாய் கரை மீது குப்பை கழிவுகளை குவித்து வருகின்றனர். இதில் காய்கறி மற்றும் இறைச்சி கழிவுகளும் கலந்திருப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், இச்சாலையில் நடந்து செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எனவே, சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையிலான குப்பை கழிவுகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை