மேலும் செய்திகள்
விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாலுகா அலுவலகங்களில் நடத்த மனு
17 hour(s) ago
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
18 hour(s) ago
இன்றைய மின் தடை
18 hour(s) ago
நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம்
18 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் உள்ள கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக ஒலிமுகமதுபேட்டை அருகில், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், சுற்றுலாத் துறை சார்பில், யாத்ரி நிவாஸ் என அழைக்கப்படும் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது.அதன் அருகில், வெளியூரில் இருந்து வரும் சுற்றுலாப் பயணியரின் வாகனங்கள் நிறுத்துவதற்கு, 'பார்க்கிங்' அமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்திற்கு வரும், சுற்றுலாப் பயணியர் கார், வேன், பேருந்து உள்ளிட்ட வாகனங்களை அங்கு 'பார்க்கிங்' செய்து வருகின்றனர். மேலும், இருசக்கர வாகனங்களும் இங்கு பார்க்கிங் செய்யப்படுகின்றன.வாகனம் நிறுத்துமிடத்தில் கூரை வசதி இல்லாததால், வெயில், மழையில் இருக்கின்றன. மேலும், பேருந்தில் வரும் சுற்றுலா பயணியர், வாகனம் நிறுத்துமிடத்தில், உணவு சமைக்கவும், சாப்பிடவும் நிழல் இல்லாததால் சிரமப்படுகின்றனர்.எனவே, யாத்ரி நிவாஸ், பார்க்கிங் வளாகத்தில் கூரை அமைக்க வேண்டும் என, சுற்றுலா பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.
17 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago