| ADDED : ஆக 05, 2024 01:20 AM
காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் கா.பன்னீர்செல்வம் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல், ஜூலை மாதம் 31 வரை, காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து எல்லைக்கு உட்பட்ட காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் பகுதிகளில் 10,000க்கும் மேற்பட்ட வாகனங்களை ஆய்வு செய்துள்ளனர்.இதில், விதிமீறிய 719 வாகனங்களுக்கு 25 லட்சத்து 80,108 ரூபாய் என, 'ஸ்பாட் பைன்' முறையில் உடனடி இணக்க கட்டணம் வசூல் செய்துள்ளனர்.மேலும், இதர அலுவலக வாகனங்களுக்கு 91 லட்சத்து 76,272 ரூபாய் இணக்க கட்டணமாக நிர்ணயம் செய்து, மொத்தம்1 கோடியே 17 லட்சத்து 56,380 ரூபாய் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.மேலும் தகுதிச்சான்று, அனுமதி சீட்டு, சாலை வரி, பதிவு செய்யப்படாத போன்ற குற்றங்களுக்காக 106 வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டு அருகிலுள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு இடங்களிலும் தணிக்கை செய்யும்போது ஓட்டுனர்களுக்கு அறிவுரை சொல்லியும் எச்சரித்தும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை எடுத்துரைத்தும் அனுப்பி வைக்கப்படுவதாக காஞ்சிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.