உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாய்ராம் கோப்பை வாலிபால் செயின்ட் பீட்ஸ் சாம்பியன்

சாய்ராம் கோப்பை வாலிபால் செயின்ட் பீட்ஸ் சாம்பியன்

சென்னை,; சாய்ராம் பொறியியல்கல்லுாரி சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான சாய்ராம் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், மேற்கு தாம்பரத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. வாலிபால், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் ஏராளமான அணிகள் பங்கேற்றுள்ளன.இதில், நேற்று முன்தினம் நிறைவடைந்த வாலிபால் போட்டியில், 40க்கு மேற்பட்ட பள்ளி அணிகள், லீக் மற்றும் நாக் அவுட் முறையில் மோதின.முதல் அரையிறுதியில், செயின்ட் பீட்ஸ் பள்ளி, 25 - 23, 23 - 25, 25 - 22 என்ற கணக்கில் ஈரோடு குமுதம் அணியையும், மற்றொரு அரையிறுதியில், ஜேப்பியார் அணி, 25 - 18, 25 - 16 என்ற கணக்கில் ஒய்.எம்.சி.ஏ., அணியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.இறுதிப் போட்டியில், செயின்ட் பீட்ஸ் மற்றும் ஜேப்பியார் அணிகள் மோதின. விறுவிறுப்பானஇப்போட்டியில், 25 - 21, 25 - 22 என்ற புள்ளிக்கணக்கில் செயின்ட் பீட்ஸ் அணி வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பையை வென்றது.முன்னதாக நடந்த மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில், குமுதம் பள்ளி, 25 - 21, 25 - 22 என்ற கணக்கில், ஒய்.எம்.சி.ஏ., பள்ளியை தோற்கடித்து பரிசை கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ