உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வீட்டு வாசலில் கழிவுநீர் தேக்கம் கொசு தொல்லையால் சுகாதார சீர்கேடு

வீட்டு வாசலில் கழிவுநீர் தேக்கம் கொசு தொல்லையால் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாநகராட்சி, பஞ்சுபேட்டை பெரிய தெரு, சந்து பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, நான்கு மாதங்களாக சாலையில் வழிந்தோடும் கழிவுநீர், வீட்டு வாசலில் தேங்கியுள்ளதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:கடந்த பிப்., மாதம் முதல், பஞ்சுபேட்டை பெரிய தெரு சந்து பகுதியில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால், துர்நாற்றம் வீசுகிறது. தெருவில் இருந்து வீட்டிற்கு கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால், செங்கற்களை அடுக்கி வைத்து அதன்மீது நடந்து செல்கிறோம்.அதேபோல இருசக்கர வாகனங்களையும் வீட்டிற்குள் எடுத்துச் செல்ல முடியாத சூழல் உள்ளதால், பாதுகாப்பின்றி வீதியில் நிறுத்திவிட்டு செல்கிறோம்.மேலும், துர்நாற்றத்தால் வீட்டிற்குள் அமர்ந்து சாப்பிட முடியவில்லை. மாத கணக்கில் தேங்கும் கழிவுநீரில் அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளதால், கொசுத் தொல்லை அதிகரித்து உள்ளது.இதனால், எங்களுக்கு கொசுக்கள் வாயிலாக பல்வேறு தொற்றுநோய் பரவும் சூழல் உள்ளது. மாநகராட்சியில் புகார் தெரிவித்தால் தற்காலிகமாக கழிவுநீரை அகற்றுகின்றனர்.ஆனால், மறுநாளே வழக்கம்போல கழிவுநீர் தேங்குகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்கவும், புதிய பைப்லைன் அமைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்இவ்வாறு அவர்கள் கூறினார்.இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சி, நகர் நல அலுவலர் அருள்நம்பி கூறியதாவது:காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை பெரிய தெரு சந்து பகுதியில், தேங்கியள்ள கழிவுநீரை அகற்றவும், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை முழுதும் நீக்கி, மீண்டும் அடைப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை