| ADDED : ஆக 15, 2024 08:31 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டாக்டர் கலாம் வழியில் உதவும் கரங்கள் அமைப்பினர், 78வது சுதந்திர தின விழாவையொட்டி, வையாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் வையாவூர் சாலையோரம் மா, புங்கன், கொய்யா, பூவரசு, வேம்பு உள்ளிட்ட நிழல் மற்றும் பழவகை என, 78 மரக்கன்றுகள் நட்டனர். பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம், எழுதுகோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டது.ஆதரவற்ற முதியோர்களை பாதுகாக்கும் மற்றும் பராமரிக்கும் தன்னார்வலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.பசுமை இந்தியா, காஞ்சி அன்னசத்திரம், விழுதுகள் தன்னார்வ அமைப்பில், 78,வது சுதந்திர தின விழாவையொட்டி, மேல்கதிர்பூர் ஏரிக்கரையில் 78 நாட்டு வகை மரக்கன்றுகளை நட்டனர்.