உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / குப்பை குவியலுடன் கழிவுநீர் தேக்கம் பஞ்சுபேட்டையில் சுகாதார சீர்கேடு

குப்பை குவியலுடன் கழிவுநீர் தேக்கம் பஞ்சுபேட்டையில் சுகாதார சீர்கேடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை பெரிய தெருவில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திரவுபதியம்மன் கோவில், ஓணகாந்தேஸ்வரர் கோவில், பால் குளிரூட்டும் நிலையம் மட்டுமின்றி 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.காஞ்சிபுரம்- - அரக்கோணம் சாலையில் இருந்து பஞ்சுபேட்டை தெருவிற்கு செல்லும் சாலையோரம் குப்பை கொட்டப்பட்டுள்ள பகுதியில், மழைநீர் தேங்கி சகதி நீராக மாறி துர்நாற்றம் வீசுகிறது. தேங்கியுள்ள கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளதால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது.எனவே, பஞ்சுபேட்டை பெரிய தெரு, சாலையோரம் தேங்கியுள்ள கழிவுநீரையும், குப்பை குவியலையும் அகற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ