உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வடிகாலில் தேங்கும் கழிவுநீரால் சிறுமாங்காடில் கொசு தொல்லை

வடிகாலில் தேங்கும் கழிவுநீரால் சிறுமாங்காடில் கொசு தொல்லை

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சிறுமாங்காடு ஊராட்சியில், அதிகரித்துஉள்ள கொசுக்கடி தொல்லையால், அப்பகுதி மக்கள் டெங்கு, மலேரிய நோய் பரவும் அச்சம் உள்ளது.ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்திற்குட்பட்ட, சிறுமாங்காடு ஊராட்சியில் 600க்கும் அதிமான வீடுகள் உள்ளன. இங்குள்ள அனைத்து தெருக்களிலும் எட்டு மாதங்களுக்கு முன், மூடிய மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டன.இந்த நிலையில், இங்குள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், வடிகாலில் மாதக்கணக்கில் தேங்குகிறது. அதில், கொசு உற்பத்தி அதிகமாக பெருகி வருகின்றன.இதனால், மாலை முதல் கொசுக்கடி தொல்லையில் அப்பகுதியினர் கடும் அவதி அடைகின்றனர். குறிப்பாக, குழந்தைகள், வயதானோர் இரவு முழுதும் கொசுக்கடியினால் துாக்கம் இன்றி தவிக்கின்றனர்.பல மாதங்களாக உள்ள இந்த பிரச்னையினை, ஊராட்சி நிர்வாகமும், சுகாதாரத் துறையினரும் கண்டுகொள்ளவில்லை. இதனால், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்த்தொற்று பரவும் அச்சத்தில் இப்பகுதியினர் உள்ளனர்.எனவே, இப்பகுதியில் உள்ள அனைத்து மழைநீர் வடிகாலிலும் பிளிச்சிங் பவுடர் கரைசல் ஊற்றி, கொசு மருந்து தெளிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ