உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாநில வாலிபால் போட்டி செயின்ட் பீட்ஸ் வெற்றி

மாநில வாலிபால் போட்டி செயின்ட் பீட்ஸ் வெற்றி

சென்னை: சாய்ராம் பொறியியல் கல்லுாரி சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான மாநில விளையாட்டு போட்டிகள், மேற்கு தாம்பரத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நேற்று துவங்கின.நேற்று காலை நடந்த மாணவருக்கான வாலிபால் போட்டியில், 40க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. முதல் போட்டியில், சாந்தோம் செயின்ட் பீட்ஸ் அணி மற்றும் அம்பத்துார் சேது பாஸ்கரா அணிகள் எதிர்கொண்டன. அதில், 35 - 23 என்ற கணக்கில் செயின்ட் பீட்ஸ் அணி வெற்றிபெற்றது.ஈரோடு குமுதம் அணி, 30 - 10 என்ற கணக்கில் சென்னை மகரிஷி பள்ளியையும், முகப்பேர் வேலம்மாள், 30 - 17 என்ற கணக்கில் சைதாப்பேட்டை வேளாங்கண்ணி பள்ளியையும் வீழ்த்தின. போட்டிகள் இன்றும்நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ