உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சாலையில் தேங்கிய தண்ணீர் கழிவுநீராக மாறி துர்நாற்றம்

சாலையில் தேங்கிய தண்ணீர் கழிவுநீராக மாறி துர்நாற்றம்

ஊவேரி : ஊவேரி ஊராட்சியில் உள்ள புத்தேரி காலனி துணை கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு, ஏரிக்கரை செல்லும் சாலைக்கு, சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.இச்சாலை வழியாக வயல்வெளி மற்றும் மூலப்பட்டு, மணியாட்சி ஆகிய கிராமங்களுக்கு செல்லும் ஏரிக்கரை சாலையை, இக்கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர். சாலையோரத்தில், சிறு மின்விசை நீர்த்தேக்க தொட்டியில், கிராமத்தினர் தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், வீணாக வெளியேறும் தண்ணீர், சிமென்ட் சாலை நடுவே தேங்குகிறது. இந்த தண்ணீர் கழிவுநீராக மாறி கொசுக்கள் உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.எனவே, புத்தேரி காலனி கிராமத்தில், கழிவுநீர் கால்வாய் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ