உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மரம் வளர்க்கும் மாணவ - மாணவியர்

மரம் வளர்க்கும் மாணவ - மாணவியர்

குன்றத்துார்:குன்றத்துார் அருகே, வீட்டிற்கு ஒரு மரச் செடி வழங்கி, முறையாக நட்டு, அதை பராமரித்து வளர்க்கும்படி வீட்டாரிடம் கூறி, இயற்கை சூழலைப் பேணும் மருத்துவக் கல்லுாரி மாணவர்களின் செயலை கிராமத்தினர் பாராட்டினர்.தாம்பரம் அடுத்த, சேலையூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில் பயிலும் மாணவ - மாணவியர், மாதந்தோறும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து, அங்கு வீட்டிற்கு ஒரு மரச் செடியைக் கொடுத்து, நட வைத்து, அதை முறையாக பராமரிக்கும்படி, வீட்டாருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.அதன்படி, நேற்று, குன்றத்துார் அடுத்த, ஒரத்துார் கிராமத்திற்கு சென்ற மாணவர் குழு, அங்குள்ள 150 வீடுகளுக்கும் தலா ஒரு மரக்கன்றை வழங்கினர். பின், அந்த வீட்டார் முன்னிலையில் மரக்கன்றுகளை நட்டு, இயற்கை சூழலின் அத்தியாவசியத்தை எடுத்துரைத்து, மரக்கன்றுகளை வளர்க்கும்படி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இந் நிகழ்ச்சியில், 150 மாணவ - மாணவியர் பங்கேற்றனர். கொய்யா, எலுமிச்சை ஆகிய மரக்கன்றுகளோடு பூச்செடிகளையும் வழங்கி, கிராமத்தினரை உற்சாகப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை