உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கோடைக்கால பயிற்சி முகாம் எஸ். ஆர்.எம்.,மில் நிறைவு

கோடைக்கால பயிற்சி முகாம் எஸ். ஆர்.எம்.,மில் நிறைவு

சென்னை : காட்டாங்கொளத்துாரில் நடந்த, பல்வேறு விளையாட்டுகளுக்கான ஒரு மாத பயிற்சி முகாம், நேற்று நிறைவடைந்தது.எஸ்.ஆர்.எம்., இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி கல்லுாரியில், விளையாட்டு இயக்குனரகம் சார்பில், கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.சிறுவர்களுக்கான இம்முகாம், மே 1 முதல் 31ம் தேதி வரை நடந்தது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து, 50க்கும் மேற்பட்ட சிறுவர்  - சிறுமியர் பங்கேற்று பயனடைந்தனர்.வில்வித்தை, தடகளம், கிரிக்கெட், கூடைப்பந்து, டென்னிஸ், ஜிம்னாஸ்டிக்ஸ், டேபிள் டென்னிஸ் உட்பட பல்வேறு விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.நேற்று காலை பயிற்சி முகாம் நிறைவு விழாவில், எஸ்.ஆர்.எம்., சட்ட பள்ளியின் டீன் வின்சென்ட் காம்ராஜ், மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.முகாமில் சிறந்த மாணவர்களாக தேர்வு செய்யப்பட்ட, கூடுவாஞ்சேரி எஸ்.ஆர்.எம்., பள்ளி மாணவி கே.கனிஷ்கா,- -விழுப்புரம்- ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியின் மாணவர் ஜெய் தேவ், கூடுவாஞ்சேரி -வேலம்மாள் வித்யாஷ்ரம் பள்ளியின் வி.எஸ்.சர்வேஷ், கூடுவாஞ்சேரி எஸ்.ஆர்.எம்., பள்ளியின் எஸ்.பி.கனிஷ்கா- ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ