உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி

ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி, திருப்போரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம் என ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளடக்கியது.ஆறு சட்டசபை தொகுதிகளிலும், 1,932 ஓட்டுச்சாவடிகள் தேர்தலன்று செயல்பட உள்ளன. இதில், 2,319 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த உள்ளன. இந்த மின்னணு இயந்திரங்களுக்கான சுழற்சி முறை தேர்வுசமீபத்தில் நடந்தது.எந்தெந்த ஓட்டுச்சாவடிக்கு எந்தெந்த இயந்திரங்கள் செல்ல போகின்றன என்ற தேர்வு முறை முடிந்துள்ள நிலையில், சின்னத்துடன் கூடிய ஓட்டுச்சீட்டு பொருத்தும் பணி நேற்று துவங்கியது.சின்னம், பெயர், வேட்பாளரின் புகைப்படம் போன்ற விபரங்கள் அச்சடிக்கப்பட்ட ஓட்டுச்சீட்டுகள், பெல் நிறுவன பொறியாளர்கள் முன்னிலையில் ஓட்டுச்சீட்டுகளை இயந்திரத்தில் தேர்தல் அதிகாரிகள் பொருத்தினர்.தேர்தல் நடத்தும் அதிகாரியும், காஞ்சிபுரம் கலெக்டருமான கலைச்செல்வி, செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், சின்னம் பொருத்தும் பணியை ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியில், 2,319 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இயந்திரத்தில் ஓட்டுச்சீட்டு பொருத்தும் பணி முடிந்தவுடன் தேர்தலுக்கு இயந்திரங்கள் தயாராகிவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை