| ADDED : ஜூலை 15, 2024 06:16 AM
சென்னை, : மத்திய பிரதேச மாநிலம் இந்துாரில், 40வது சப் - ஜூனியர் மற்றும் 50வது ஜூனியர் தேசிய டைவிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.இரு பாலருக்குமான இப்போட்டியில், ஜூனியர் பிரிவில் பங்கேற்ற தமிழக வீராங்கனை சிவாஷ்மி, குரூப் - 3 சிறுமியர் பிரிவில், 3 மீட்டர் ஸ்ப்ரிங் போர்ட் போட்டியில் 197.25 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.அதுமட்டுமல்லாமல், 1 மீட்டர் ஸ்ப்ரிங் போர்ட் டைவிங் போட்டியிலும் சிவாஷ்மி 164.30 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கத்தை கைப்பற்றினார். இவர், புழுதிவாக்கம், வியாச வித்யாலயா பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார்.சிறுவர்களுக்கான குரூப் - 3, மூன்று மீட்டர் ஸ்ப்ரிங் போர்டு பிரிவில், தமிழக வீரர் லோகிதாஸ்வா 184.40 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கம் வென்றார். இவர், கிண்டி ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். இருவருக்கும் வேளச்சேரி நீச்சல் குளத்தில், அஜய் பயிற்சி அளித்து வருகிறார்.தேசிய டைவிங் போட்டியில், தமிழக அணிக்கு முதன் முறையாக மூன்று வெள்ளி பதக்கங்கள் வென்று தந்த இருவரையும், தமிழ்நாடு மாநில நீச்சல் சங்கத்தின் செயலர் சந்திரசேகரன் பாராட்டினார்.