உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / படம் மட்டும் அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா விமரிசை

படம் மட்டும் அம்மன் கோவில்களில் ஆடி திருவிழா விமரிசை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சி , தாயார் குளம், எம்.ஜி.ஆர்., நகர் கிழக்கு பகுதியில் ரேணுகாம்பாள் கோவிலில், 22ம் ஆண்டு ஆடித்திருவிழா 23ம் தேதி இரவு 8:00 மணிக்கு காப்பு கட்டுதல் நிகழ்வுடன் துவங்கியது. நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு அம்மன் பூங்கரம் வீதியுலாவும், மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தலும், மாலை 3:00 மணிக்கு ஊரணி பொங்கல் வைக்கப்பட்டது. இரவு 9:00 மணிக்கு முத்துவேல் கலைக்குழுவினரின் பம்பை, உடுக்கை, சிலம்பாட்டத்துடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ரேணுகாம்பாள் முக்கிய வீதி வழியாக உலா வந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர தீபராதனை காண்பித்து வழிபட்டனர்.விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் , விழாக்குழுவினர், இளைஞர்கள் செய்திருந்தனர்.குளக்கரை மாரியம்மன் கோவில்பெரியகாஞ்சிபுரம், சாலை தெருவில் உள்ள பழமையான குளக்கரை மாரியம்மன் கோவிலில், ஆடித்திருவிழாவின் முதல் நாளான நேற்று, உற்சவர் அம்மன், புட்லுார் அங்காளம்மன்போல கர்ப்பிணி பெண் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். குழந்தை வரம் வேண்டி பல பெண்கள் அம்மனை தரிசித்தனர். சிறப்பு தீபாராதனை நடைபெற்றன.மாலையில் திருவிளக்கு வழிபாடும் நடைபெற்றது.இரண்டாம் நாள் விழாவான இன்று ராதாம்மாள் வரதபிள்ளை அறக்கட்டளை சார்பில் அரசுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.காஞ்சிபுரம் சஞ்சீவி ராஜா சுவாமிகள் ஊக்கத்தொகை வழங்குகிறார்.மூன்றாம் நாளான காலை கூழ் வார்த்தல் விழாவும், பொங்கல் வைக்கும் வைபவமும் அம்மன் வீதியுலாவும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, கூழமந்தல் மாரியம்மன் கோவிலில் காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்க்கப்பட்டது. இரவு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய மாரியம்மன் வீதியுலா வந்தார்.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, சந்தவெளி அம்மன் ஆடி மாதம் 10ம் நாளான நேற்று வராஹி அம்மன் அலங்காரத்திலும், பெரிய காஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாள், சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆடி இரண்டாம் வெள்ளியையொட்டி, இக்கோவில்களில் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை