உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாநில குத்துச்சண்டை; போலீசார் உற்சாகம்

மாநில குத்துச்சண்டை; போலீசார் உற்சாகம்

சென்னை : தமிழக காவல் துறைக்கான மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில், நேற்று நடந்தது.சென்னை அடுத்த ஆவடி, வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பிரிவு, இரண்டாவது பட்டாலியன் சார்பில் இருபாலருக்கும் போட்டி நடத்தப்பட்டது.ஆண்கள் பிரிவில் 13 வகையான எடை பிரிவிலும், பெண்கள் பிரிவில் 12 வகையான எடை பிரிவிலும் போட்டிகள் நடந்தன. இதில், தமிழக காவல் துறையின் பல்வேறு காவல் மாவட்டங்கள் மற்றும் பிரிவுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர்.மொத்தம் 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இப்போட்டியில், ஒவ்வொரு எடை பிரிவிலும் வெற்றி பெற்றவர்கள், அடுத்த மாதம் 9 முதல் 13ம் தேதி வரை, லக்னோ, சரோஜினி நகர், கே.டி.சிங் விளையாட்டு அரங்கில் நடக்கவுள்ள, அகில இந்திய போலீசார் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக அணி சார்பில் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி