ஏனாத்துாரில் நெற்களம் அமைப்பு
ஏனாத்துார்:வாலாஜாபாத் ஒன்றியம் ஏனாத்துார் ஊராட்சி, கவுரியம்மன் பேட்டை, செட்டியார்பேட்டை, கட்டவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், விவசாய நிலங்களில் அறுவடை செய்யப்படும் நெல்லை உலர வைக்க நெற்களம் அமைக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.இதை தொடர்ந்து, வாலாஜாபாத் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், ஒன்றிய பொது நிதி, 2024- - 25ம் ஆண்டு 9 லட்சம் ரூபாய் செலவில், ஏனாத்துாரில் புதிதாக நெற்களம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், ஏனாத்துார் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.