உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது

கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, சுங்குவார்சத்திரத்தில் இருந்து, மரச்சாமான்களை ஏற்றிக் கொண்டு, பெங்களூரு நோக்கி நேற்று மாலை, 'ஈச்சர்' லாரி ஒன்று சென்றது.சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சுங்குவார்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் அருகே சென்ற போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த, 'ஈச்சர்' லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில், வாகனத்தில் இருந்த 3 டன் எடை கொண்ட மரச்சாமான்கள் சாலையில் கொட்டியது. ஓட்டுனர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார்.தகவலறிந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார், பொக்லைன் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த, 'ஈச்சர்' லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.இதனால், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்படைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்