உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாத்திரை விற்றவரை மாட்டிவிட்ட மனைவி

மாத்திரை விற்றவரை மாட்டிவிட்ட மனைவி

சென்னை: வேளச்சேரி, காந்திநகரைச் சேர்ந்த வினோத் என்பவரது மனைவி சூரியபிரியா, 26. இவர் நேற்று, வினோத் போதையில் அடித்து உதைப்பதாக, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.வேளச்சேரி போலீசார் சென்ற போது, வினோத் போதையில் இருந்தார். விசாரணையில், அவர் 400 போதை மாத்திரை வைத்திருந்தது தெரிந்தது.இவரது நண்பர் ஜெகன், 25, என்பவருடன் சேர்ந்து, போதை மாத்திரையை பெங்களூரில் இருந்து கடத்தி வந்து பயன்படுத்துவதுடன், வேளச்சேரி பகுதியில் விற்பனை செய்து வந்துள்ளனர்.இவரது மனைவிக்கு, மாத்திரை விற்பனை செய்வது தெரியாது. அடித்து உதைத்தது குறித்து போலீசார் விசாரிக்க சென்ற போது, வினோத் சிக்கினார். இதையடுத்து வினோத், 30, இவரது நண்பர் ஜெகன், 25, ஆகியோரை போலீசார் கைது செய்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை