உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கஞ்சா விற்ற இருவர் கைது

கஞ்சா விற்ற இருவர் கைது

ஸ்ரீபெரும்புதுார்:ஒரகடம் பகுதியில், வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனை நடப்பதாக, ஒரகடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்படி, ஒரகடம் அருகே வைப்பூர் கிராமத்தில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் தங்கியுள்ள அறையில் போலீசார் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர்.சோதனையில், விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 1.10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சதாம் உசேன், 29, அக்தர் அலி, 21, ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ