மேலும் செய்திகள்
வல்லக்கோட்டை முருகன் கோவிலில் திருக்கல்யாண உத்சவம் விமரிசை
19 hour(s) ago
இடையூறான மின்கம்பம்: மணியாட்சியில் அகற்றம்
19 hour(s) ago
மண் அரிப்பால் சாலை சேதம்: ஆரம்பாக்கத்தில் விபத்து அபாயம்
19 hour(s) ago
எண்ணுார்:எண்ணுார், எஸ்.வி.எம்.நகர் 2வது தெருவைச் சேர்ந்தவர் பாக்கியம், 65; வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு தன் வீட்டு வாசலில் அமர்ந்திருந்தபோது, பைக்கில் வந்த மூவர் கும்பல், கத்தியால் சரமாரியாக வெட்டி தப்பியது.இதில், நடுத்தலையில் பலத்த காயமடைந்த பாக்கியம், ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, எண்ணுாரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கிருந்து, மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சை அமைக்கப்பட்ட நிலையில், நேற்று உயிரிழந்தார்.எண்ணுார் போலீசார் உடலை, பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடுகள் செய்தனர். அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதை அடுத்து, எண்ணுார் உதவி போலீஸ் கமிஷனர் வீரக்குமார் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தில் பாதுகாப்பு மற்றும் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் தெரிய வந்ததாவது:எண்ணுார், எஸ்.வி.எம்.நகரைச் சேர்ந்த ஜீவராஜ் என்பவர் இளம்பெண் ஒருவரை காதலித்துள்ளார். இது பிடிக்காத பாக்கியத்தின் பேரன் மகேஷ், 'அவளிடம் ஏன் பேசுகிறாய். இனி பேச கூடாது' என எச்சரித்துள்ளார். இதனால், இருவரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், மகேஷ் அவரது நண்பர்களான சந்தோஷ்குமார், விக்னேஷ் ஆகியோருடன் சேர்ந்து, ஜீவராஜை கடந்த மாதம் வெட்டியுள்ளார். இந்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மூவரும், ஜாமினில் வெளியே வந்தனர்.இதையறிந்த ஜீவராஜ், மகேைஷ பழித்தீர்க்க தன் நண்பர்களுடன் சேர்ந்து அவரது வீட்டிற்கு சென்றார். அங்கு மகேஷ் இல்லாததால், வீட்டு வாசலில் அமர்ந்திருந்த மகேஷின் பாட்டி பாக்கியத்திடம் கேட்டுள்ளளார்.அதற்கு பாக்கியம், 'தெரியாது' எனக்கூறியுள்ளார். ஆத்திரமடைந்த ஜீவராஜ், அவரது அண்ணனான மீஞ்சூரை சேர்ந்த அஜய், 24, மற்றும் நண்பரான செங்கல்பட்டைச் சேர்ந்த விக்ரம், 23, என்பவருடன் சேர்ந்து மூதாட்டியின் தலையில் வெட்டியது தெரியவந்தது. அஜய், விக்ரம் ஆகியோரை கைது செய்த போலீசார், ஜீவராஜை போலீசார் தேடி வருகின்றனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago