| ADDED : ஆக 22, 2024 06:34 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாயார்குளம் அருகே, தனலட்சுமி என்ற பெயரில் மின்னணு எடை இயந்திரமும், மரம் அறுக்கும் பட்டறையும் இயங்கி வருகிறது. இங்கு, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண் என, 6 பேர் தங்கி, பணியாற்றி வந்துள்ளனர்.இந்நிலையில், பட்டறையில் சேகரமாகும் மரத்துாள், பைகளில் அடைக்கும் பணிகள் நேற்று காலை நடந்துள்ளது. அப்போது, மரத்துார் பை சூடாகி வெடித்துள்ளது.இதில், ராஜ்பவன், 21, 4 வயதான அங்கித் என்ற சிறுவனும் படுகாயமடைந்தனர். தகவலறிந்த சிவகாஞ்சி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றனர்.காயடைமடைந்த இருவரையும், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்து, அங்கிருந்து தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து நடந்தது குறித்து, சிவகாஞ்சி போலீசார் விசாரிக்கின்றனர்.