உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்பு இன்றி திறந்தவெளி கிணறு

தடுப்பு இன்றி திறந்தவெளி கிணறு

ஏகனாபுரம்:மதுரமங்கலம் அடுத்த, ஏகனாபுரம் கிராம ஏரிக்கரை2யோரம், திறந்தவெளி கிணறு உள்ளது. 50 ஆண்டுகளுக்கு முன், இந்த கிணற்று நீரை, ஏகனாபுரம் கிராமத்தினர் குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.தற்போது, ஏகனாபுரம் கிராமத்தில், ஆழ்துளை கிணறுகளின் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக, திறந்தவெளி கிணறுகளின் பயன்பாடு அறவே இல்லை.இருப்பினும், ஏகனாபுரம் கிராம ஏரிக்கரை சாலையோரம் இருக்கும் திறந்தவெளி கிணற்றால், வாகன ஓட்டிகள் கிணற்றில் தவறி விழும் அபாயம் உள்ளது.குறிப்பாக, ஏகனாபுரம் கிராமத்தில் இருந்து, ஏரிக்கரை சாலையோரம் ஊராட்சி நடுநிலைப் பள்ளிக்கு செல்லும் வாகன ஓட்டிகள் வளைவில் திரும்பும் போது, திறந்தவெளி கிணற்றில் தவறி விழும் நிலை உள்ளது.எனவே, ஏகனாபுரம் கிராமத்தில் திறந்தவெளியாக இருக்கும் கிணற்று மீது தடுப்பு கம்பி அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை