உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வணிகர் வீதியில் இருந்து, பல்லவர்மேடு, பிள்ளையார்பாளையம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் ராஜகோபால் பூபதி தெரு வழியாக சென்று வருகின்றனர்.வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்த இச்சாலையில், இரு இடங்களில் மழை மற்றும் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக சாலையில் வழிந்தோடிய கழிவுநீரால் சாலை சேதமடைந்தள்ளது.இதனால், லேசான மழைக்கே சாலை சேதமடைந்த பகுதியில் குட்டைபோல தேங்கிய மழைநீர் சகதிநீராக மாறி தேங்கியுள்ளது. பள்ளம் இருப்பது தெரியாமல் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, ராஜகோபால் பூபதி தெருவில், சேதமடைந்த சாலையை பேட்ச் ஒர்க் பணியாக சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை