உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பசுந்தாள் உரம் பயன்பாட்டில் உத்திரமேரூர் விவசாயிகள் ஆர்வம்

பசுந்தாள் உரம் பயன்பாட்டில் உத்திரமேரூர் விவசாயிகள் ஆர்வம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் ஒன்றியத்தில், விச்சூர், கரும்பாக்கம், தென்பாதி, மிளகர்மேனி, அரும்புலியூர் போன்ற பகுதிகளில் நெல் பயிரிடும் பெரும்பாலான விவசாயிகள், பசுந்தாள் உரம் பயன்பாட்டை துவங்கி உள்ளனர்.நிலத்தில், பசுந்தாள் விதைகள் விதைத்து, இரண்டு மாதங்கள் வளர செய்து, பின் நிலத்தில் நீர் பாய்ச்சி, ஏர் உழுது, தழைகளை நிலத்திற்கு உரமாக்கி, பின் அடுத்த பயிரை நடவு செய்கின்றனர்.இதனால், செலவு குறைந்து விவசாயத்தில் கனிசமான லாபம் கிடைப்பதாக அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.இதுகுறித்து, தென்பாதி கிராம விவசாயி ஆறுமுகம் கூறியதாவது:நெல் பயிரிடும் விவசாய நிலங்களுக்கு, ஒரு ஏக்கருக்கு 5 டிராக்டர் வண்டி சாணம் எரு தேவையாக உள்ளது. இதற்கு, வண்டி கூலி மற்றும் ஏற்றுமதி செலவு உட்பட 5,000 ரூபாய்க்கு மேல் செலவாகிறது.தற்போது அவுரி, தக்கை பூண்டு போன்ற தழை சத்துள்ள பசுந்தாள் உரம் பயன்படுத்த துவங்கி உள்ளோம். இந்த வகையான தழை சத்து செடி விதைகள், கிலோ ஒன்றுக்கு, 65 ரூபாய் வீதம் ஏக்கருக்கு, 15 கிலோவில் இருந்து, 20 கிலோ வரை தேவையாக உள்ளது.இவ்விதமான பயன்பாட்டிற்கு, விதைத்தல், ஏர் உழுதல் செலவு உட்பட 2,000 ரூபாய் வரை மட்டுமே செலவாகிறது. மேலும், பயிருக்கு தேவையான சத்து கிடைத்து வளமாக விளைச்சல் கிடைக்கிறது.தற்போது பசுந்தாள் உரம் விதைகள், வேளாண் அலுவலகங்களில் மானிய விலையில் கிடைப்பது கூடுதல் லாபமாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி