உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூர் ஏரி கலங்கல் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்

உத்திரமேரூர் ஏரி கலங்கல் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்

உத்திரமேரூர்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2வது பெரிய ஏரியாக உத்திரமேரூர் ஏரி உள்ளது. மழைக்காலத்தில், இந்த ஏரி முழுமையாக நிரம்பினால் காட்டுப்பாக்கம் அருகே உள்ள ஏரிக்கரையின் கலங்கல் வாயிலாக உபரிநீர் வெளியேறி, மேனலூர் வழியாக கம்மளாம்பூண்டி உள்ளிட்ட பகுதி ஏரிகளுக்கு தண்ணீர் சென்றடைவது வழக்கம். உத்திரமேரூர் ஏரி கலங்கலில் இருந்து, உபரிநீர் வெளியேறும் அக்கால்வாய், புதர்கள் நிறைந்து தூர்ந்து இருந்தன. இதனால் தண்ணீர் சீராக செல்ல சிக்கல் உள்ளதால், அக்கால்வாய் தூர்வாரி சீர் செய்ய விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.அதன்படி, நீர்வளத் துறை சார்பில், வெள்ள தடுப்பு நிதி வாயிலாக, 3 கி.மீ., தூரத்திற்கான கால்வாய், சில தினங்களாக தூர்வாரி சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகின்றன.இதேபோன்று, உத்திரமேரூர் ஏரியின் மூன்றாவது கலங்கல் பகுதி கால்வாயும் தூர்வாரும் பணி துவங்கி நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை