உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 22ல் காஞ்சி வரதர் கருடசேவை; உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுமா?

22ல் காஞ்சி வரதர் கருடசேவை; உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுமா?

காஞ்சிபுரம், : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவம், வரும் 17ம் தேதி துவங்கி, 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. கருடசேவை, தேரோட்டம், தீர்த்தவாரி போன்ற உற்சவங்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.இதில், கருடசேவை உற்சவத்தை காண, வெளியூர், வெளி மாவட்டங்களில் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர். கருடசேவை உற்சவம், வரும் 22ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு, அன்றைய தினம், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட நிர்வாகம் அளிக்க வேண்டும் என, பக்தர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்தாண்டு, கருடசேவை, ஆடிக்கிருத்திகை போன்ற விமரிசையான பண்டிகைக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்காதது விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், நடப்பாண்டு கருடசேவை உற்சவத்தின்போது உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடந்த ஆண்டுகளில்,கருடசேவை உற்சவத்தின்போது உள்ளூர் விடுமுறை விடுவது வழக்கமாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ