உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நண்பருடன் சேர்ந்து கணவரை கத்தியால் குத்திய பெண் கைது

நண்பருடன் சேர்ந்து கணவரை கத்தியால் குத்திய பெண் கைது

கொருக்குப்பேட்டை : எண்ணுார், சத்தியவாணிமுத்து நகர் தெருவைச் சேர்ந்தவர் செல்வம், 42. இவருக்கு ராஜேஸ்வரி, 40, என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த இரண்டரை ஆண்டுகளாக தம்பதிபிரிந்து வாழ்கின்றனர்.நேற்று, கொருக்குப்பேட்டை, மூன்றாவது தெரு, மூக்குப்பொடி கம்பெனி எதிரில் செல்வம் வேலை செய்துள்ளார்.அங்கு வந்த அவரது மனைவி ராஜேஸ்வரி மற்றும் அவரது நண்பர் சக்திவேல் ஆகியோர், செல்வத்திடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளனர்.வாய்த்தகராறு முற்றிய நிலையில் ராஜேஸ்வரி, சக்திவேல் ஆகியோர், கத்தியால் செல்வத்தை குத்திவிட்டு தப்பிச் சென்றனர். காயமடைந்த அவரை அங்கிருந்தோர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.இதுகுறித்த புகாரை விசாரித்த கொருக்குப்பேட்டை போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ராஜேஸ்வரியை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.தலைமறைவான சக்திவேலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்