உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திறன் வளர்ப்பு பயிற்சிக்கு பதிவு செய்யலாம்

திறன் வளர்ப்பு பயிற்சிக்கு பதிவு செய்யலாம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு துறை சார்பில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி பதிவு செய்யும் முகாம், காஞ்சிபுரம் மகளிர் கல்லுாரியில் நேற்று நடந்தது. வேலை வாய்ப்பு அலுவலக துணை இயக்குநர் செந்தில்குமார் தலைமை வகித்தார்.காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, முகாமை துவக்கி வைத்து பேசியதாவது:தனியார் வங்கிகள், நிதி சேவைகள், தகவல் மற்றும் மென்பொருள் மேம்பாடு, தளவாடங்கள், உற்பத்தி மற்றும் தொழில் துறைகளில், 12 மாத கட்டணமில்லாத பயிற்சி வழங்கப்படுகிறது.இதில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ, பட்டயம், பட்டப்படிப்பு முடித்த, 24 வயது வரை இளைஞர்கள் முகாமில் பதிவு செய்து பயன் பெறலாம்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை