உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கஞ்சா விற்ற இளைஞர் சிறுகாவேரிப்பாக்கத்தில் கைது

கஞ்சா விற்ற இளைஞர் சிறுகாவேரிப்பாக்கத்தில் கைது

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, சிறுகாவேரிப்பாக்கத்தில், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழகம் கிடங்கு உள்ளது. இதன் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக, காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, அப்பகுதியில், போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். இளைஞர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமாக அங்கு ஒளிந்திருந்தார்.அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும், அவரிடம் 1.4 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.அவரை மடக்கி பிடித்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சிறுகாவேரிப்பாக்கம் போஸ்ட், விநாயகபுரம் வெங்கடேசன், 25., என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ