உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கருங்குழியில் தெருநாய் கடியால் 5 மாதங்களில் 240 பேர் பாதிப்பு

கருங்குழியில் தெருநாய் கடியால் 5 மாதங்களில் 240 பேர் பாதிப்பு

மதுராந்தகம்:கருங்குழி பேரூராட்சி மற்றும் அருகே உள்ள ஊராட்சிகளான அரைப்பாக்கம், ஏர்பாக்கம், கிணார், பூதுார், முன்னுத்திக்குப்பம் பகுதிகளில், கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.இப்பகுதிகளில் இருந்து தினமும் ஐந்து நபர்களாவது, நாய் கடிக்கு ஆளாகி, அரசு மருத்துவமனைக்கு செல்கின்றனர்.அந்த வகையில், கருங்குழி சுற்றுவட்டாரத்தில் மட்டும், ஐந்து மாதங்களில், 240க்கும் மேற்பட்டோர் தெரு நாய் கடிக்கு ஆளாகி, கருங்குழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றுள்ளனர்.இச்சம்பவம், கருங்குழி பேரூராட்சி மற்றும் அருகே உள்ள ஊராட்சி பகுதியில் உள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் கூட்டம் கூட்டமாக சாலையில் திரிகின்றன. மேலும், இருசக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டி விரட்டி கடிப்பதற்கு பாய்கின்றன.இவ்வாறு திரியும் நாய்களால், முதியவர் மற்றும் சிறுவர்கள் வெளியே செல்லவே அச்சப்படுகின்றனர். சாலையோரம் வீசப்படும் கோழி இறைச்சி, மீன் கழிவுகளை நாய்கள் உண்பதால், இவ்வாறான செயல்களில் ஈடுபடுகின்றன.இதுதொடர்பாக கருங்குழி பேரூராட்சியில் பலமுறை புகார் அளித்தும், நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை. எனவே, தெருநாய்களை கட்டுப்படுத்த, கருங்குழி பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி