உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஏகாம்பரநாதர் கோவிலில் 2வது கட்ட பாலாலயம்

ஏகாம்பரநாதர் கோவிலில் 2வது கட்ட பாலாலயம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாத சுவாமி கோவிலில், கும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு, 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருந்தது.கடந்த ஜூன் 28ல், கோவில் ராஜகோபுரம், விநாயகர், பல்லவ கோபுர ஆறுமுகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு முதற்கட்டமாக பாலாலயம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று, கொடிமரம், நந்தி, பலிபீடம், நடராஜர் கோபுரம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கான பாலாலயம் நடந்தது.யாகசாலைகள் அமைக்கப்பட்டு 21 சிவாச்சாரியர்கள் பூஜைகளை நடத்தினர். கோவில் அறங்காவலர்கள், ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்