| ADDED : ஜன 30, 2024 09:57 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள, 6 பெண்கள் உட்பட 34 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு தேர்வு, காவல் பயிற்சி பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.இதில், ஏ.டி.எஸ்.பி., வெள்ளத்துரை உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்று, ஊர்க்காவல் படைக்கு தேவையான தகுதியான ஆட்களை தேர்வு செய்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, ஆண், பெண் என, 300 பேர் பங்கேற்றனர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 20 - 45 வயதுக்குட்பட்ட, குற்றப்பின்னணி இல்லாத நபர்கள் 34 பேரை போலீசார் தேர்வு செய்தனர்.காத்திருப்பு பட்டியலில், 16 பேர் வைத்திருப்பதாகவும், தேர்வு செய்யப்பட்ட நபர்கள் உடல் தகுதி தேர்விற்கு வராதபோது, 16 பேரில் இருந்து அழைத்துக் கொள்ள திட்டமிட்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.