உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / செஸ் போட்டிக்கு தேர்வு 350 வீரர்கள் பங்கேற்பு

செஸ் போட்டிக்கு தேர்வு 350 வீரர்கள் பங்கேற்பு

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் சார்பில், மாநில அளவிலான செஸ் போட்டியில் பங்கேற்க, தகுதியான வீரர் - வீராங்கனையரை தேர்ந்தெடுக்கும் போட்டி, திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில் நேற்று நடந்தது.அம்பத்துார் அடுத்த அயனம்பாக்கம், யு.சி.சி.கே., மெட்ரிக் பள்ளியில் நடந்த இப்போட்டியில், ஆண், பெண் என இருபாலரிலும், மொத்தம் 350 வீரர் - -வீராங்கனையர் பங்கேற்றனர்.இரு பாலரிலும், 7, 11 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டோர் என, வயதின் அடிப்படையில், மூன்று பிரிவுகளில் 'பிடே' விதிப்படி, 'சுவிஸ்' அடிப்படையில், ஆறு சுற்று போட்டிகள் நடத்தப்பட்டன. தவிர, திருவள்ளூர் மாவட்ட பெண்களுக்கென பிரத்யேக ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியும் நடந்தது.இப்போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர் - -வீராங்கனையர், அடுத்தடுத்த மாதங்களில் நடக்க உள்ள மாநில செஸ் போட்டியில், திருவள்ளூர் மாவட்ட அணி சார்பில் பங்கேற்பர் என, போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை