உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி கட்டுப்பாட்டு அறையில் 40 தேர்தல் புகார்கள் பதிவு

காஞ்சி கட்டுப்பாட்டு அறையில் 40 தேர்தல் புகார்கள் பதிவு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்கான, தேர்தல் கட்டுப்பாட்டு அறை, கலெக்டர் அலுவலகத்தின் மூன்றாவது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது.இதே அறையில், மீடியா சென்டரும் அமைக்கப்பட்டுள்ளது. 'டிவி' சேனல்களில் வரும் விளம்பரங்களை கண்காணிக்கவும், தொலைபேசி மற்றும் 'சி- விஜில்' மொபைல் ஆப் மூலம் வரும் புகார்களை கண்காணிக்க பல ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் விதிமீறல் பற்றிய புகார் வந்தால், உடனடியாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் தெரிவித்து, நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துகின்றனர்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த சனிக்கிழமை முதல், நேற்று வரை 40 புகார்கள் வந்துள்ளதாகவும், அனைத்து புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி