| ADDED : ஜன 11, 2024 09:54 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கஞ்சா விற்பனை, அரிசி கடத்தல் போன்ற பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.இதைத்தடுக்க, குற்றவாளிகளை சம்பந்தப்பட்ட வழக்கில் கைது செய்வதோடு மட்டுமல்லாமல், குண்டர் சட்டத்திலும் ஓராண்டு சிறையில் வைத்திருக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.அவ்வாறு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு காரணமாக இருக்கும் குற்றவாளிகள் அதிகளவில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுகின்றனர். அதன்படி, 2023 ஜனவரி முதல் டிசம்பர் வரை, 45 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், கீழ்கதிர்பூர் கிராமத்தில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த நபர்களும், அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்களும், ரவுடி படப்பை குணா உள்ளிட்டோர் குண்டர் சட்டத்தில், கடந்தாண்டு கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.