உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தகவல் அறியும் சட்டத்தின்கீழ் 60 வழக்குகளுக்கு தீர்வு

தகவல் அறியும் சட்டத்தின்கீழ் 60 வழக்குகளுக்கு தீர்வு

காஞ்சிபுரம், தமிழக தகவல் கமிஷன் தொடர்பாக, பொது தகவல் அலுவலர்கள் மற்றும் மனுதாரர்கள் சென்னையில் உள்ள தமிழக தகவல் கமிஷன் அலுவலகத்திற்கு வருவதற்கு சிரமமாக உள்ள சூழ்நிலையின் காரணமாக பல்வேறு கமிஷனர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு முகாம் மேற்கொண்டு வருகின்றனர்.அந்தந்த மாவட்டங்களில் விசாரணை மேற்கொண்டு நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு மனுக்களின் மீது விசாரணை மேற்கொண்டு நிலுவை வழக்குகள் மீது தீர்வு காணப்பட்டு வருகிறது.அதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் நிலுவையில் உள்ள இரண்டாம் மேல்முறையீட்டு மனுக்களின் மீதான, 60 வழக்குகளுக்கு, மார்ச் 20 மற்றும் 21 ஆகிய இரு நாட்கள், தமிழக தகவல் கமிஷனர் செல்வராஜ் தலைமையில் விசாரணை நடைபெற்று தீர்வு காணப்பட்டது.மேலும், தமிழக தகவல் கமிஷன் அலுவலகத்தின் விசாரணை முகாமின் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், தமிழக தகவல் கமிஷனர் செல்வராஜ் தலைமையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை சார்ந்த பொது தகவல் அலுவலர்களுடன் தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாம் நடந்தது.இக்கூட்டத்தில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சத்யா மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை