உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பூட்டி கிடக்கும் சர்வேயர் அலுவலகம்

பூட்டி கிடக்கும் சர்வேயர் அலுவலகம்

உத்திரமேரூர்:உத்தரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் குறுவட்டத்தில், வி.ஏ.ஒ. அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், சார் - பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம் போன்றவை உள்ளது.இந்நிலையில், 5 ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாடு அரசு நில அளவர் மற்றும் பதிவேடுகள் துறை சார்பில், சர்வேயர் குடியிருப்புடன் கூடிய அலுவலகம் புதியதாக கட்டப்பட்டது.இக்கட்டடத்திற்கான பணி முழுமையாக நிறைவு பெற்று திறப்பு விழா நடந்தது. அதை தொடர்ந்து, 5 ஆண்டுகளாக திறக்கப்படாமல் பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது.இதனால், சாலவாக்கம் பகுதியினர் நில அளவீட்டுக்கு மனு அளித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு உத்திரமேரூரில் உள்ள சர்வேயர் பிரிவுக்கு செல்கின்றனர்.இதனால், காலவிரயம் ஏற்படுவதுடன் கூடுதல் செலவினம் மற்றும் அலைச்சல் அதிகரிப்பதாக அப்பகுதியினர் புலம்பி வருகின்றனர்.எனவே, சாலவாக்கம் குறுவட்ட நில அளவர் குடியிருப்பு மற்றும் அலுவலக கட்டடத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதோடு, அலுவலர் தினமும் இங்கு பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சாலவாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை