மேலும் செய்திகள்
வி.ஏ.ஓ., காலி பணியிடத்தால் காட்டாங்குளம் மக்கள் அவதி
6 minutes ago
இன்று இனிதாக
6 minutes ago
மனைவி, மகன் கண் எதிரே விபத்தில் கணவன் பலி
7 minutes ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் அருகில்,வாகன போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள பழுதடைந்த மினி சரக்கு வேனை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர். காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில் மாட வீதி வழியாக காமாட்சியம்மன் கோவில், ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோவில், குமரகோட்டம் கோவில் பஞ்சுகொட்டி தெரு, செங்கழுநீரோடை வீதி உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர். இந்நிலையில், உலகளந்த பெருமாள் கோவில் அருகில், பழுதடைந்த மினி சரக்கு வேன் ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள இந்த வாகனத்தால், சாலையின் அகலம் குறைந்துள்ளது. இதனால், இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தப்பட்டுள்ள பழுதடைந்த மினி சரக்கு வேனை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
6 minutes ago
6 minutes ago
7 minutes ago