உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடகளத்தில் 3,000 பேர் உறுதிமொழி ஏற்று சாதனை

தடகளத்தில் 3,000 பேர் உறுதிமொழி ஏற்று சாதனை

சென்னை: அரசின் பள்ளிக்கல்வித் துறையின், குடியரசு தின விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், சென்னை வருவாய் மாவட்டத்தின் தடகளப் போட்டி, அசோக் நகர் ஜி.ஆர்.டி., பள்ளி சார்பில் நேற்று, பெரியமேடில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் காலை துவங்கியது.போட்டியில், சென்னை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட 23 மண்டலங்களில் இருந்து, வெற்றி பெற்ற 3,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.காலை துவங்கிய முதல் நாள் போட்டியை, சென்னை மாவட்ட கல்வி அலுவலர் புகழேந்தி,ஜி.ஆர்.டி., பள்ளியின் தாளாளர் ஜெயஸ்ரீ ராஜேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.போட்டியில், 14, 17 மற்றும் 19 வயதினருக்கு, 100 மீ., 200 மீ., 500 மீ.., 1,000 மீ., ஓட்டம், ஈட்டி எறிதல், வட்டு எறிதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் என தனித்தனியாக 31 வகையாக போட்டிகள் நடக்கின்றன.நேற்று, போட்டி துவங்கும் முன், 3,000 மாணவ - மாணவியர் ஒன்றிணைந்து, போதை தடுப்புக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்வை, 'கோல்டன் புக் ஆப் ரெக்கார்டு' சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.போட்டிகள் தொடர்ந்து நான்கு நாட்கள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை