உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்புகள் இல்லாத பாலத்தால் கிளக்காடியில் விபத்து அபாயம்

தடுப்புகள் இல்லாத பாலத்தால் கிளக்காடியில் விபத்து அபாயம்

உத்திரமேரூர்; உத்திரமேரூர் ஒன்றியம், கிளக்காடி கிராமத்தில் இருந்து, எஸ்.மாம்பாக்கம் செல்லும் சாலையில், நீர்வரத்து கால்வாய் மீது பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.இந்த பாலத்தின் வழியே சுற்றுவட்டாரகிராமத்தை சேர்ந்தவர்கள், உத்திரமேரூர்,சாலவாக்கம், செங்கல்பட்டு ஆகிய பகுதி களுக்கு தினமும் சென்று வருகின்றனர்.இந்த பாலத்தின் மீது செல்லும் வாகனங்கள் நிலைத்தடுமாறி நீர்வரத்து கால்வாயில் தவறி விழுவதை தடுக்க, 20 ஆண்டுக்கு முன் தடுப்புகள் அமைக்கப்பட்டன.தற்போது, பாலம் முறையான பராமரிப்புஇல்லாததால், கான்கிரீட் தடுப்புகள் சேதமடைந்து உள்ளன. இதனால், இரவு நேரங்களில் அவ்வழியே செல்லும் வாகனங்கள் நிலைத் தடுமாறி, கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.சேதமடைந்துள்ள கான்கிரீட் தடுப்புகளைசீரமைக்காமல், துறை அதிகாரிகள் மெத்தனம்காட்டி வருகின்றனர். எனவே, பாலத்தில் போதிய தடுப்புகளை ஏற்படுத்த, வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை