உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / தடுப்புகள் இல்லாத சிறுபாலத்தால் உத்திரமேரூரில் விபத்து அபாயம்

தடுப்புகள் இல்லாத சிறுபாலத்தால் உத்திரமேரூரில் விபத்து அபாயம்

உத்திரமேரூர்: - உத்திரமேரூரில், எல்.எண்டத்துார் நெடுஞ்சாலையில் தடுப்புகள் இல்லாத சிறுபாலத்தால் விபத்து அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. உத்திரமேரூர் பேரூராட்சியில், எல்.எண்டத்துார் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் நுாக்கலம்மன் கோவில் அருகே, நீர்வரத்து கால்வாய் மீது சிறுபாலம் கட்டப்பட்டு உள்ளது. உத்திரமேரூரில் இருந்து இந்த சிறுபாலத்தின் வழியே சுற்றுவட்டார கிராமத்தினர், எல்.எண்டாத்துார், அச்சரப்பாக்கம், மதுராந்தகம், மேல் மருவத்துார் ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இந்த சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்புகள் இல்லாமல் உள்ளன. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி, நீர்வரத்து கால்வாயில் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும், மழை நேரங்களில் கால்வாயில் தண்ணீர் செல்லும்போது, அப்பகுதி சிறுவர்கள் பாலத்தில் நின்று வேடிக்கை பார்க்கின்றனர். அப்போது, தடுப்புகள் இல்லாததால் எதிர்பாராதவிதமாக சிறுவர்கள், கால்வாயில் விழுந்து உயிரிழக்க வாய்ப்புள்ளது. எனவே, உத்திரமேரூரில், எல்.எண்டத்துார் சாலையில் உள்ள சிறுபாலத்தின் இருபுறமும் தடுப்புகள் அமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை